அடிப்படை வசதிகள் அற்று காணப்படும் ஆனையிறவு அ.த.க பாடசாலைஅடிப்படை வசதிகள் அற்று காணப்படும் ஆனையிறவு அ.த.க பாடசாலை

 

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு அ.த.க பாடசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. இந்த பாடசாலையானது தற்போது பரந்தன் சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலை குடிதண்ணீர் வசதி மற்றும் மலசலகூட வசதிகள் அற்ற நிலையில் காணப்படுவதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

வடக்கின் வசந்தத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்றுள்ளன என அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான கவனிக்கப்படாத அடிப்படை தேவைகள் பெருமளவில் உள்ளமை தெரிய வருகின்றது.

மேலும் முடிவடைந்த போரின் நினைவுச்சினங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான தேவைகள் என அபிவிருத்தியடைந்து வரும் ஆனையிறவுப் பிரதேசத்தில் இவ்வாறான அடிப்படைத்தேவைகள் நிறைவு செய்யாமை கவலைக்குரியது.

 

கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக 

 

unnamed

unnamed (3)

unnamed (2)

ஆசிரியர்