கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்! கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவிலிருந்து 20 இலங்கையர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவுகளிலிருந்து இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரண்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான சட்ட அந்தஸ்தை இழந்துள்ளதாகவும் அவர் குறிபிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரையில் 963 புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Australia-Immigration-Stamp0_eu25102012

இதில் 200 பேர் மட்டுமே சுய விருப்பின் அடிப்படையில் நாடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் கட்டாயத்தின் பேரில் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இலங்கைக்கு நாடுகடத்த 20 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை வேளை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்