விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம் விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம்

 

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தனது மகனை மீட்டு தருமாறு போராடி வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதான மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களினது வாசல்ஸ்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DSC_0448

DSC_0444

DSC_0439

DSC_0433

DSC_0440

ஆசிரியர்