பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மே 16 ஆம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.

கோச்சடையான் படம் குறித்த தகவல்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு, தனது குடும்ப வாழ்க்கை, திரையுலக அனுபவங்கள் போன்ற பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்தை நடிகர் விவேக் பேட்டி எடுத்துள்ளார்.

இந்த பேட்டி ஜெயா டீவிக்காக நேற்று ஒளிப்பதிவு செய்யப்பட்டது. ஜெயா டீவி இந்த பேட்டியை வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்ப இருக்கின்றது. அவரது பேட்டியை காண ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

kochadaiyaan-photoshoot-got-over-34d49b7f

ஆசிரியர்