மாணிக்க கல் தேடும் வேட்டையில் பலாங்கொட மக்கள்மாணிக்க கல் தேடும் வேட்டையில் பலாங்கொட மக்கள்

பலாங்கொட – வெலிஹரனாவ பகுதியில் மாணிக்க கல் வளம் உள்ளதாகக் கருதப்படும் மண்ணை எடுத்துச் செல்ல பிரதேச மக்களுக்கு அனுமதி அளிக்கட்டுள்ளது.

மாணிக்க கல் வளமுள்ளதாகக் கருதப்படும் காணி பலாங்கொட பிரதேச சபைக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் மாணிக்க கல் வளம் உள்ளதாகக் கருதப்படும் மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.

வெலிஹரனாவ பகுதியில் நீர் திட்ட வேலைத் திட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மாணிக்க கல் வளம் இருப்பதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பிரதேச மக்கள் அவ்விடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் பலாங்கொடை பிரதேச சபை தலையிட்டு மண் வளத்தை பெற்றுக் கொண்டனர். எனினும் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த மண் தற்போது பிரித்து வழங்கப்படுகிறது.

Kataragama

z_new350

ஆசிரியர்