April 2, 2023 4:36 am

ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமே.ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமே.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நம்மூரில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று சேவை செய்வது போல ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஒரு டாலர் மட்டுமே சம்பளம் பெறுவதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிள், மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தலைவர் மார்க். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆனால் ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களின் சம்பளம் மிக மிக அதிகம். ஃபேஸ்புக்கில் பணிபுரியும் தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்மென்ஸ்ஸின் ஊதியம் 10.5 மில்லியன் டாலர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சேண்ட் பேர்கின் சம்பளம் 16.1 மில்லியன் டாலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு டாலர் சம்பளம் பெறும் ஃபேஸ்புக் நிறுவனரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? $28.7 பில்லியன் டாலர் ஆகும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்