இமாச்சல் ஆற்றில் மூழ்கிய 24 பொறியியல் கல்லூரி மாணவர்களில் 5 உடல்கள் மீட்பு: இமாச்சல் ஆற்றில் மூழ்கிய 24 பொறியியல் கல்லூரி மாணவர்களில் 5 உடல்கள் மீட்பு:

ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் இமாச்சலபிரதேசத்தில் மலைப் பிரதேசமான மணாலிக்கு சுற்றுலா சென்றனர். மணாலியில் இருந்து மாண்டிக்கு சென்றபோது, வழியில் தலோட் அருகில் உள்ள பியஸ் ஆற்றங்கரையில் வாகனத்தை நிறுத்தி கரையில் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்தனர்.

அப்போது, அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிட்டதால், தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதில் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். இன்று காலையில் 5 உடல்களை மீட்டனர்.

மீதமுள்ளவர்களும் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்