சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற நாடாக விளங்கி வரும் நேபாளம் தற்போது சிறுநீரக விற்பனையிலும் கொடி கட்டி பறக்கிறது. தெருவுக்கு தெரு சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு பலர் காத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு 7 ஆயிரம் சிறுநீரகங்கள் நேபாளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுநீரகங்களை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து 300க்கும் அதிகமான சிறுநீரக புரோக்கர்கள் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் முகாம் இட்டுள்ளனர் என்றும், ஒரு சிறுநீரகத்திற்கு 18 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதால், போட்டி போட்டு பலரும் சிறுநீரகம் கொடுக்க தயாராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
