April 1, 2023 6:53 pm

லண்டனில் அபூர்வ ராகங்கள் 2014 | பிரபல பின்னணி பாடகர்கள் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து வழங்கிய இனிய இசை நிகழ்வு (படங்கள் இணைப்பு)லண்டனில் அபூர்வ ராகங்கள் 2014 | பிரபல பின்னணி பாடகர்கள் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து வழங்கிய இனிய இசை நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நேற்று சனிக்கிழமை தெற்கு லண்டன் குரொய்டனில் மாபெரும் இசை நிகழ்வு “அபூர்வ ராகங்கள்” நடைபெற்றது. Lebara மொபைல் ஆதரவில் நடைபெற்ற இவ் இசை நிகழ்ச்சியினை Concern SriLanka Foundation ஒழுங்கு செய்திருந்தது. 

ஆரம்பத்தில் உள்ளூர் இளம் கலைஞர்களின் நிகழ்வு நடைபெற்றதுடன் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் பாடிய சில பாடல்களுக்கு லண்டனில் இயங்கும் நாடியப்பள்ளி மாணவிகளின் நடனங்கள் பின்னணியில் இடம்பெற்றமை அரங்கத்தை கட்டிப்போட வைத்தது. 

தென்னிந்திய சினிமா பின்னணிப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற விஜைப் பிரகாஷ் மற்றும் சின்மயி தங்களது தனித்துவமான பாடல்கள் மூலம் அரங்கை அதிரவைத்தபோதும் பழைய பாடல்கள் பல பாடியமையும் ரசிக்க வைத்தது. 

சின்மயி பாடிய சிங்கார வேலனே பாடலுக்கு ட்ரம் வாத்தியக் கலைஞர் தவில் வாசித்தமை இவ் நிகழ்வில் சிகரம்போல் அமைந்தது, அத்தனை சிறப்பு.

ஆண்டு தோறும் நடைபெறும் “அபூர்வ ராகங்கள்” நிகழ்வு வழமைபோல் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வை வெற்றி வானொலி அறிவிப்பாளர் ஜே ஜே மற்றும் தீபம் தொலைக்காட்சி தொகுப்பாளர் யோகா தினேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

(நன்றி | படங்கள் : அஜன் வீடியோ, ஈகிள் மீடியா, வணக்கம் லண்டன்)

10480072_703028313097257_7442089124790723976_o 10478168_672083592869675_1886483277279058072_n 10492315_672082309536470_6431681632417573405_n 10428118_703028483097240_1861338596998757233_o IMG_4107 IMG_4131 IMG_4056 1965425_672082239536477_4092362077624213791_o IMG_4069 IMG_4136 10364128_672082002869834_2876908474589341940_n

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்