ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹெலிகாப்டர் முற்றாக சேதம் ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹெலிகாப்டர் முற்றாக சேதம்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிபர் ஹமீத் கர்சாய் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு தீவிரவாதிகள் கடும் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்தனர்.

பின்னர் 2 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில், அதிபர் ஹமீத் கர்சாயின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. அது தவிர மேலும் ஹெலிகாப்டர்கள் சேதம் அடைந்தன.

உடனே அங்கு சென்று தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விமானங்கள் தப்பின. இந்த தகவலை ராணுவ டைரக்டர் ஜெனரல் மேஜர் அப்சல் அமான் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் இமெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலால் யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்