இலண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப் போட்டி | பாடசாலை சமூகத்தின் ஒன்றிணைந்த நிகழ்வு இலண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப் போட்டி | பாடசாலை சமூகத்தின் ஒன்றிணைந்த நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு இலண்டன் வெம்ப்ளி பகுதியில் இயங்கும் இலண்டன் தமிழ் நிலையத்தின் தமிழ் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

சுமார் 500 மாணவர்கள் கல்வி கற்கும் இத்தமிழ்ப் பாடசாலையில் மாணவர்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் பயிற்சிகளும் நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் என ஒன்றிணைந்த நிகழ்வாக இந்த விளையாட்டுப் போட்டி பாடசாலையின் முதல்வர் Dr. அனந்தசயனன் தலைமையில் இம்முறை சிறப்பாக நடைபெற்றது. 

சிறந்த திட்டமிடலுடன் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வு மாணவர்களிடையே விளையாட்டுக்கள் மீதான திறமைகளை வெளிப்படுத்துவதில் சமநிலையை பேணியது எனலாம். மாணவர்களின் உற்சாகமும் தமது இல்லம் வெல்லவேண்டுமென்ற உணர்வுகளும் அங்கே வலிமையாக காணப்பட்டது. 

முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற அன்றைய தினத்தை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். முக்கியமாக தமக்குள் தமிழில் சரளமாக கதைத்துகொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் பாடசாலைகள் உருவாக்கியமையின் நோக்கம் வெற்றியை நோக்கி செல்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.  

தாயக உணவுகளும் மேலைத்தேச உணவுகளும் சுடச்சுட பரிமாறப்பட்டது. 

IMG_4324

IMG_4288

IMG_4266

IMG_4325

IMG_4326

IMG_4332

IMG_4273

IMG_4276

IMG_4305

IMG_4309

IMG_4314

IMG_4320

IMG_4283

IMG_4285

IMG_4292

IMG_4294

IMG_4296

IMG_4278

IMG_4279

ஆசிரியர்