March 24, 2023 3:18 pm

இந்திய அரசு ஐ.நா., கண்காணிப்பு அமைப்புகாலி செய்ய உத்தரவுஇந்திய அரசு ஐ.நா., கண்காணிப்பு அமைப்புகாலி செய்ய உத்தரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் எல்லையை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பின் டில்லி அலுவலகத்தை காலி செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த அமைப்பிற்கு, கடந்த, 40 ஆண்டுகளாக, டில்லியில் இலவசமாக பங்களா ஒன்றை இந்திய அரசு வழங்கியிருந்தது. அதில், 110 அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். அவர்களின் செலவு, சம்பளம் போன்றவற்றை, ஐக்கிய நாடுகள் சபை வழங்கி வந்தது.இந்நிலையில், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பின் அலுவலகத்தை காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், அக்பருதீன் கூறுகையில், ”அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அதற்கு பின் உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தம், எல்லை கட்டுப்பாட்டு கோடு போன்றவை, இந்த அமைப்பின் வேலையை குறைத்து விட்டன. சிக்கன நடவடிக்கை யில் இறங்கியுள்ள அரசு, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது,” என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்