90-வது வயதில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார்

 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன.

இனவெறிக்கு எதிரான போராளி

தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழுதினார். 1980-ம் ஆண்டுகளில் இனவெறிக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவாக அவர் எழுதினார்.

நாடின் கார்டிமரின் இறுதிச் சடங்கு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஆசிரியர்