தொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு மெக்சிகோவில் தடைதொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு மெக்சிகோவில் தடை

மெக்சிகோவில் தொலைக்காட்சியில் குளிர்பான விளம்பரங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் வார நாள்களில் தினமும் மதியம் 2:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையிலும், வார இறுதி நாள்களில் காலை 7:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திரையரங்குகளிலும் இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் 70 சதவீத பெரியவர்களும், 30 சதவீத குழந்தைகளும் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமனுடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக, மெக்சிகோவில் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு 163 லிட்டர் குளிர்பானம் அருந்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டின் பெரும்பாலான உணவு வகைகள் அதிக கலோரி கொண்டவையாகும்.

இந்நிலையில், உடல் பருமன் பிரச்னை அந்நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதேநிலை நீடித்தால், இந்தப் பிரச்னைக்காக வரும் 2107ஆம் ஆண்டில், 11.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,322 கோடி) செலவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆசிரியர்