காஸாவில் இயங்கி வந்த மின் உற்பத்தி மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் காஸாவில் இயங்கி வந்த மின் உற்பத்தி மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

காஸாவில் செயல்பட்டு வந்த ஒரே ஒரு மின் உற்பத்தி மையம் இஸ்ரேல் ராணுவத்தால் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.

காஸாவில் இயங்கி வந்த மின் உற்பத்தி மையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய திங்கள்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த மையத்திலிருந்த நீராவியை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் எந்திரம் கடுமையாக சேதமடைந்தது. மற்றொரு ஏவுகணைத் தாக்குலில் எரிபொருள் நிரப்பி வைக்கும் தொட்டி தீப்பிடித்து எறிந்தது. இதனால் ஏற்பட்ட தீயானது செவ்வாயக்கிழமை காலை வரை கொழுந்து விட்டு எறிந்ததால், அதன் அருகில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மின் உற்பத்தி மையத்துக்கு தேவையான மின்சாரம் இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்டு வந்தது. அங்கு நடைபெற்று வரும் தாக்குதல்களால், இந்த மின் உற்பத்தி மையத்துக்கு மின்சாரத்தை கொண்டுவரும் பாதைகள் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன’ என்றார்.

ஆசிரியர்