சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள் | வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள் | வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

dfg

வட ஈராக்­கி­லுள்ள கொஷோ கிரா­மத்தை சுற்றி வளைத்­துள்ள ஐ.எஸ்.போரா­ளிகள், அங்­குள்ள மக்­க­ளுக்கு மதம் மாறு­வ­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளனர்.அவ்­வாறு மதம் மாறு­வ­தற்கு தவ­று­ப­வர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

கொஷோ கிரா­மத்­தி­லுள்­ள­வர்கள் மதம் மாறத்­ த­வறும் பட்­சத்தில் அந்த கிரா­மத்­தி­லுள்ள 2,500 பேரும் கொல்­லப்­படும் அபாயம் நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.இது தொடர்­பான அதிர்ச்சி தக­வலை பிரித்­தா­னிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ளது.

போரா­ளிகள் அந்தப் பிராந்­தி­யத்தில் தம்மால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிலு­வையில் அறைந்து மரணதண்­டனை நிறை­வேற்றும் புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கி­யுள்­ளன.கடந்த வாரம் கனா மற்றும் ஹெஸான் ஆகிய இரு கிரா­மங்­களை ஐ.எஸ். போரா­ளிகள் கைப்­பற்­றி­யி­ருந்­தனர். அவர்கள் கனா கிரா­மத்தில் 32 ஆண்­களைக் கொன்று அங்­கி­ருந்த பெண்­களை கடத்திச் சென்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.
ஹெஸான் கிரா­மத்தில் தம்மால் பிடிக்­கப்­பட்ட பெண்கள் அனை­வ­ரையும் நிர்­வா­ண­மாக்கி அழைத்துச் சென்­ற­துடன் சுமார் 70 ஆண்­களை சுட்டுக் கொன்­றுள்­ளனர்.இந்­நி­லையில் அச்­ச­ம­டைந்த சுமார் 60 வயது மதிக்­கத்­தக்க பெண் தற்­கொலை செய்யும் முக­மாக தனது வீட்­டின் மூன்றாம் மாடி­யி­லி­ருந்து குதித்­த­தா­கவும் புதி­தாக திரு­ம­ண­மான 26 வயது பெண்ணொருவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் ‘டெயிலி மெயில்’ ஊடகவியலாளர் அயன் பிரெல் கூறுகிறார்.

வட ஈராக்­கி­லுள்ள கொஷோ கிரா­மத்தை சுற்றி வளைத்­துள்ள ஐ.எஸ்.போரா­ளிகள், அங்­குள்ள மக்­க­ளுக்கு மதம் மாறு­வ­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளனர்.அவ்­வாறு மதம் மாறு­வ­தற்கு தவ­று­ப­வர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஆசிரியர்