வெள்ளப் பெருக்கு | நேபாளத்தில் 89 பேர் பலிவெள்ளப் பெருக்கு | நேபாளத்தில் 89 பேர் பலி

இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ளநதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால், நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.கர்னாலி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மத்திய மேற்கு பகுதிகளில், 7,000 வீடுகளும், பார்டியா மாவட்டத்தில், 12 ஆயிரம் வீடுகளும் நீரில் மூழ்கின.’மழை வெள்ளத்தில் சிக்கி, 89 பேர் உயிரிழந்துள்ளனர்; 139 பேரை காணவில்லை’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள நேபாளத்துக்கு ரூ. 3 கோடி உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த 3 ஹெலிகாப்டர்கள் நேபாளம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்