ஜாக்கி சான் மகன் ஜெய்சி சான் கைதுஜாக்கி சான் மகன் ஜெய்சி சான் கைது

ஹாங்காங் நாட்டை சேர்ந்தவரான ஜாக்கி சானின் 32 வயது மகனான ஜெய்சி சான் போதை மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்சியும் திரைப்படங்கள் மற்றும், ‘டிவி’ தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜெய்சி சானையும், அவரின் நண்பரான தவைனை சேர்ந்த 23 வயது கை கோ சென்-டங்கும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 100 கிராம் எடை கொண்ட மரிஜுவானா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சானிடம் மரிஜுவானாவை விற்க முயன்ற 33 வயதான சாங் என்பவனை போலீசார் கைது செய்ததுடன், அவனிடமிருந்து 11 கிராம் போதைப்பொருளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

ஆசிரியர்