ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க இலங்கை மறுப்பு ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க இலங்கை மறுப்பு

போர்க் குற்றம் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. குழுவினருக்கு விசா அளிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை ராஜபட்ச அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஐ.நா. மனித உரிமைகள் குழுவுடனான ஒத்துழையாமை தொடரும். மேலும், போர்க்குற்றப் புகார் தொடர்பாக, சர்வதேச அளவிலான விசாரணை மேற்கொள்பவர்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

இலங்கையில் விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பது எங்களது உறுதியான நிலைப்பாடு என்று ராஜபட்ச கூறினார்.

விடுதலைப் புலிகளுடனான போரில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க இலங்கை ஐவர் குழுவை அமைத்துள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் அவதேஷ் கெüசல், பாகிஸ்தான் வழக்குரைஞர் அகமர் பிலால் ஸþஃபி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ஐ.நா. சார்பில் பல்வேறு போர்க்குற்றப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ள வழக்குரைஞர் டெஸ்மண்ட் டிசில்வா, அமெரிக்க சட்ட வல்லுநர் டேவிட் கிரேன், ஜெஃப்ரி நைஸ் ஆகியோர் இலங்கை அறிவித்துள்ள குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

ஆசிரியர்