ஜப்பானில் நிலச்சரிவு- மீட்புப் படையினர் பலிஜப்பானில் நிலச்சரிவு- மீட்புப் படையினர் பலி

ஜப்பானின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 27க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஜப்பானின், ஹிரோஷிமா பகுதியில் நேற்று முன்தினம், பலத்த மழை பெய்தது. இதையடுத்து, மலை மீதிருந்த பாறைகள் சரியத் துவங்கின. மரங்களுடன் மண் குவியல்கள் பெருமளவில் சரிந்ததில், மழைக்கு கீழே இருந்த மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது மண் சரிந்தது. இதில், வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த மீட்புக் குழுவினரும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினரில் ஒருவர், சகதி கலந்த மண் குவியலில் சிக்கி உயிரிழந்தார். மண் மூடிய வீடுகளில் இறந்து கிடந்த, 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.

ஆசிரியர்