ஜெர்மனி நகரில் ஐரோப்பாவின் மிகப் பெரிய ‘வாட்டர் பார்க்’ஜெர்மனி நகரில் ஐரோப்பாவின் மிகப் பெரிய ‘வாட்டர் பார்க்’

ஜெர்மனி நகரில், ஐரோப்பாவின் மிகப் பெரிய, ‘வாட்டர் பார்க்’ அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு அருகில் உள்ள கிராஸ்னிக்கில், ‘டிராபிகல் ஐலேண்டு ரிசார்ட்’ என்ற பெயரில், பிரமாண்டமாக, 7 லட்சம் சதுர அடி பரப்பில், இந்த நீர் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னர் விமானங்கள் நிறுத்துமிடமாக இருந்த இந்த இடம், அதன் உரிமையாளர் திவாலான பின், பாழடைந்து கிடந்தது. அந்த இடத்தில் தான், இந்த கேளிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு கால்பந்து மைதானங்கள் அளவில், ஏரிகள், அழகிய காடுகள், செயற்கை கடல் ஆகியவை உள்ளன. இந்த ரிசார்ட்டில், மதுபான பார், ஸ்பா, நீராவி குளியல், ஏரிகள் மற்றும் குகைகள் உள்ளன.

ஒரே நேரத்தில், 6,000 சுற்றுலா பயணிகள் இங்கு சுற்றிப் பார்க்க முடியும். இங்குள்ள ஓட்டல் அறைகளில், 522 படுக்கைகள் உள்ளன.

இங்கு, கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில், அதன் வடிவம் மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்