ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் அமெரிக்க இளம்பெண்ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் அமெரிக்க இளம்பெண்

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில், 26 வயது அமெரிக்க பெண் ஒருவர் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் சமூக சேவை செய்து வந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு பயங்கரவாதிகளிடம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த போது, பெயர் குறிப்பிடப்படாத இந்தப் பெண்ணை, பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு சிறை பிடித்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே, 40, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்தப் பெண்ணின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பயங்கரவாதிகள் பிடியில் இருந்த, பீட்டர் கர்டிஸ் என்ற பத்திரிகையாளர், சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இன்னொரு பத்திரிகையாளர் ஆஸ்டின் டைஸ், 2012 முதல் சிரியாவில் மாயமாகி விட்டார். அவரை பயங்கரவாதிகள் தான் பிடித்து வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி களிடம் ஏராளமான பணம் உள்ளது. ஆள்கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் மூலம் ஏராளமான பணத்தை அவர்கள் சேர்த்துள்ளனர் என, அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர், வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான்

கெர்ரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பயங்கரவாதி : ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அமைப்பில் சேர்ந்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்த, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த, டக்ளஸ் மக் ஆர்தர் மக்கெய்ன், 33, என்ற அமெரிக்கர், பயங்கரவாத செயலில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது. பிறப்பிலிருந்தே கிறிஸ்தவராக இருந்த டக்ளஸ் மக்ஆர்தர், பல ஆண்டுகளுக்கு முன், முஸ்லிமாக மதம் மாறி, இரண்டு ஆண்டு களுக்கு முன் சிரியா சென்று, பயங்கரவாதி களுடன் இணைந்து விட்டார். அவர் சமீபத்தில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்