தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்

தாய்லாந்தில் இருந்து  இலங்கைக்கு   சட்டவிரோதமாக அந்தூரியம் பூக்கன்றுகளை கொண்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 31,600 ரூபா பெறுமதியான 158 அந்தூரியம் பூக்கன்றுகளை  சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேகநபருக்கு 10,000 ரூபா அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்