ஒரு ஆண்டில்10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ.நா. தகவல்ஒரு ஆண்டில்10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ.நா. தகவல்

ஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதாக ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

யுனிசெஃப் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் ‘சிசு உயிர் பாதுகாப்பு’ என்ற நோக்கத்தோடு உலகம் முழுவதிலும் உள்ள பிறந்த குழந்தைகள் நலன் குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “பிறந்த குழந்தைகள் இறப்பதற்கான காரணங்கள் மிக எளிய முறையில் தடுக்கக் கூடியவையாகவே உள்ளன.

பிரசவ நேரத்தில் தாயிக்கு சிறந்த தரமான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலே பிறந்த குழந்தைகள் இறப்பதை தடுக்கலாம்.இதில், ஏற்படும் அலட்சியத்தால் வருடத்திற்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அடுத்த 24 மணி நேரத்திலேயே உயிரிழக்கின்றனர்” என்று யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்