தலையை துண்டிக்கும் ஜிகாதி ஜானை கொல்ல வேண்டும் | இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலையை துண்டிக்கும் ஜிகாதி ஜானை கொல்ல வேண்டும் | இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்

பிணைக் கைதிகளின் தலையை துண்டிக்கும் ஐ.எஸ் தீவிரவாதி ஜானை வேட்டையாடும்படி உளவுத்துறைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பழிவாங்கும் விதத்தில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை தலையை துண்டித்து ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்தனர். அமெரிக்காவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்ததால், அந்நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸின் தலையை துண்டித்தனர்.

தற்போது இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்கையும் கொலை செய்துள்ளனர். ஐஎஸ் அமைப்பில் உள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் என்ற தீவிரவாதியே தலையை துண்டிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார் என தெரியவந்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலால் கோபம் அடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், தங்கள் நாட்டின் எம்15, எம்.16, மற்றும் ஜிசிஎச்க்யூ என்ற முக்கிய உளவு அமைப்பின் தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

தலையை துண்டிக்கும் ஜிகாதி ஜானை எப்படியாவது கொல்ல வேண்டும் அல்லது உயிருடன் பிடிக்க வேண்டும் என உளவுத்துறை தலைவர்களுக்கு கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்