Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா | சூப்பர் கம்ப்யூட்டர்கள்4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா | சூப்பர் கம்ப்யூட்டர்கள்

4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா | சூப்பர் கம்ப்யூட்டர்கள்4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா | சூப்பர் கம்ப்யூட்டர்கள்

1 minutes read

உலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகிலுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்யும் நிபுணர்களால், “டாப்500′ என்ற பட்டியல் ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில்

இரண்டாவது முறையாக வெளியிடப்பட்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், சீனாவின் “தியான்ஹே-2′ சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தக் கணினி, இந்தப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே, நவம்பர் 2010, ஜூன் 2011 ஆகிய மாதங்களில்

வெளியிடப்பட்ட அதிவேகக் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் சீனாவின் தியான்ஹே-1ஏ சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ள தியான்ஹே-2, வினாடிக்கு 33.86 “பெட்ஃபிளாப்புகள்’ (கணினிகளின் வேகத்தைக் கணக்கிடும் அலகு) வேகத்தில் இயங்குகிறது.

அதாவது, இதனைக் கொண்டு ஒரு வினாடிக்கு 3,38,600 கோடி கோடி கணக்கீடுகளை செய்ய முடியும். இந்தப் பட்டியலில், இந்தியாவின் புணே பருவநிலை ஆய்வு

மையத்திலுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் 71-ஆவது இடத்திலும், மத்திய அரசின் “சி-டாக்’ அமைப்பின் “பரம் யுவா-2′ 131-ஆவது இடத்திலும் உள்ளன. மிக அதிக எண்ணிக்கையிலான

சூப்பர் கம்ப்யூட்டர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், 231 கணினிகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More