June 2, 2023 12:33 pm

“மார்ட்டின் லூதர் கிங்’ விருது | இந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாம்“மார்ட்டின் லூதர் கிங்’ விருது | இந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாமுக்கு, பெருமை மிக்க மார்ட்டின் லூதர் கிங் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மக்கள் சேவையிலும், உலகளாவிய சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை நனவாக்கி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக, மார்ட்டின் லூதர் கிங் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபிராங்க் இஸ்லாம் கூறியதாவது: மகாத்மா காந்திக்கும், மார்ட்டின் லூதர் கிங்குக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. 1954-ஆம் ஆண்டு இந்தியா வந்த மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியின் அகிம்சை முறையைப் பின்பற்றி போராட்டங்களில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியும், மார்ட்டின் லூதர் கிங்கும் எனது வழிகாட்டிகள். இந்திய அமெரிக்கர் என்ற முறையில் இந்த விருதைப் பெறுவதில் பெருமிதம் அடைகிறேன் என்றார் ஃபிராங் இஸ்லாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்