Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்

புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்

2 minutes read

வட மாகாணத்தின் ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்; வட மாகாணத்தினுடைய பிரதம செயலாளரை மாற்றியிருக்கின்றார்கள் இதையொரு நல்ல விடயமாக நாங்கள் கருதுகிறோம்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று 27-01-2015 காலை 10.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலையின் கால்கோள் விழா (புதுமுக விழா)நடைபெற்றது.

இன்நிகழ்வானது விபுலானந்தாக் கல்லூரி அதிபர் க.தனபாலசிங்கம் தலமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில்

பாடசாலைக்குத் தேவையான விழையாட்டு மைதானம் மற்றும் கட்டிடம் என்பன பெரிய சவால்கள் இந்த சவால்களை பாடசாலை சமூகத்துடன் சேர்ந்து வெற்றிகொள்ள உறுதுணையாக இருப்போம். இந்த வடக்கு மாகாணசபை நாங்கள் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் வடக்கு மாகாணசபை செயல்ப்பட முடியாதபடி பல சவால்களை சந்தித்திருந்தோம். நிதி உட்பட மாகாண சபையின் சுதந்திரமான செயல்ப்பாட்டை அனுமதிக்காத சவால்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இன்று இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது நாங்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் இல்லாமல் இந்த மாகாணசபை சுயமாக இயங்கும் என்கிற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது. அதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும். நாங்கள் இந்த ஆட்சி மாறவேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுத்து மக்கள் புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சில விடயங்களை செய்திருக்கின்றது.இந்த மாகாணத்தின் ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்; இந்த மாகாணத்தினுடைய பிரதம செயலாளரை மாற்றியிருக்கின்றார்கள் இதையொரு நல்ல விடயமாக நாங்கள் கருதுகிறோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 19600 விசேட தேவைக்குட்பட்டோர் இருக்கிறார்கள் அத்துடன் 40000 மேற்பட்ட இளம் விதவைகள் இருக்கிறார்கள் மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட 15000 க்கு மேற்பட்ட முன்னாள்போராளிகள் இருக்கிறார்கள்இ பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்இ குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் ஆகவே இவ்வாறான பல விடயங்களை ஒருமுகப்படுத்தி செயல்படவேண்டிய மாகாணமாக இருக்கின்றது.

பாடசாலை மாணவர்கள் விரும்பத்தகாத செயல்ப்பாடுகளில் ஈடுபடுவதால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தாங்களே சீரழிக்கின்ற நிலமை இங்கு காணப்படுகின்றது. பல பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியிருக்கின்றார்கள்இ பாலியல் ரீதியான நோயாளிகளாக மாணவர்கள் இருக்கிறார்கள். நான் கூறும் விடயங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கலாம் அண்மையில் ஒரு மாணவன் எய்ட்ஸ் நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளான்.

ஆகவே இந்த 30 வருட நீண்டகால யுத்தம் காரணமாக எங்களுடைய சமுதாய கட்டமைப்பு முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் இருக்கின்றது. இச்சிதைவானது பாடசாலை மட்டத்திலிருந்து சீர் செய்யப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா மற்றும் தர்மபால செனவிரெட்ன ஆளுநரின் இணைப்பு செயலாளர் ஜ.எஸ்.எம். முகைதீன்இ முன்னாள் நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி ஆகியோர்கலந்துகொண்டனர்

PICT0218

PICT0209

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More