June 8, 2023 6:33 am

வரலாற்று சிறப்பு மிக்க தங்க நாணயங்கள் கொள்ளை-அமெரிக்கா அருங்காட்சியகத்தில்வரலாற்று சிறப்பு மிக்க தங்க நாணயங்கள் கொள்ளை-அமெரிக்கா அருங்காட்சியகத்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரில் வரலாற்று சிறப்புமிக்க வெல்ஸ் பார்கோ அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பழங்கால பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். துப்பாக்கி முனையில் காவலாளியை மடக்கினர்.

பின்னர் உள்ளே புகுந்த அவர்கள் அங்கு காட்சி பொருளாக வைத்திருந்த பழங்கால தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நாணயங்கள் மொத்தம் 284 கிராம் எடையுள்ளது. அதன் மதிப்பு இந்திய ரூ. 6 லட்சம்.

முன்னதாக முகமூடி கொள்ளையர்கள் ஒரு பந்தய காரில் அதிவேகமாக வந்து அருங்காட்சியகத்தின் முன்புறம் உள்ள கண்ணாடி கதவுகளின் மீது மோதி உடைத்தனர்.

கொள்ளையர்களால் திருடப்பட்ட தங்க நாணயங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. இதை அவர்களால் விற்பனை செய்ய முடியாது. வேண்டுமானால் அவற்றை உருக்கி வேறு வடிவத்துக்கு மாற்றலாம் என பழங்கால நாணயங்கள் விற்பனையாளர் டான் கார் கின் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்