May 31, 2023 5:03 pm

எளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவிஎளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பல உயிர்க் கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், எளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் இந்த புதிய ஆப்பை கண்டுபிடித்துள்ளனர்.

டாங்கிள்-ஐ என்ற மிகச் சிறிய வடிவிலான இந்த கருவியை ஸ்மார்ட் போன் அல்லது கணினியில் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த கருவிக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

டாங்கிள் கருவின் மேல் புறத்தில் ஒருவரின் கட்டை விரலை வைத்தவுடன், அவரது விரலில் இருந்து தானாகவே ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு, 15 நிமிடங்களில் அவர்களுக்கு உயிர்க் கொல்லி நோய்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்து சொல்லிவிடும்.

நோய் இருப்பதை அறிந்து கொள்ளவே பல நாட்கள் ஆவதும், அதற்கான கருவிகள் பல லட்ச ரூபாய் மதிப்பிருப்பதும் பலரது மரணத்துக்குக் காரணமாக இருக்கும் நிலையில், இந்த டாங்கிள் மூலமாக பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்