செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விமானத்தை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர் | லிபியாவிமானத்தை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர் | லிபியா

விமானத்தை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர் | லிபியாவிமானத்தை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர் | லிபியா

1 minutes read

லிபியாவில் இன்று அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் செபாவில் இருந்து திரிபோலிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் பயணம் செய்த இரண்டு நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், விமானத்தை மால்டாவில் தரையிறக்கச் செய்தனர். இதையடுத்து மால்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ரன்வேயில் நிறுத்தப்பட்ட விமானத்தை வீரர்கள் சுற்றி வளைத்து தயார் நிலையில் இருந்தனர். அவசர கால மீட்புக்குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.

இதனால் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அதிகாரிகள் தவித்த நிலையில், பயணிகளை விடுவித்த கடத்தல் காரர்கள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்தனர். இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். அதனையடுத்து கடத்தல்காரர்களும் விமானத்தில் இருந்து இறங்கி சரண் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விமானத்தைக் கடத்தியவர்கள் மால்டாவில் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் என்றும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.