ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியிலேயே இன்று பிற்பகல் 03 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொகவந்தலாவ பிரதேச மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு பாதையை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட ஏனைய 10 பேருமாக 28 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்

இதையடுத்து குறத்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.