ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.9 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குரில் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 99 கிலோமீற்றர் தொலைவில் 143 கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதோடு உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பாக இதுவரையில் செய்திகள் வெளிவரவில்லை.

இதேவேளை, குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்