சீனர்களை கடத்த முயன்ற விவகாரம் 15 ஆண்டுகள் சிறையா?

சீனர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரம்: இந்தோனேசியர்களுக்கு 15 ஆண்டுகள் சிறையா?
 
கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் 2 இந்தோனேசியர் மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
 
கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த இம்மீனவர்கள், மனித கடத்தல் குற்றத்திற்காக 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகின்றது.
 
சீனர்களை ஆஸ்திரேலியாவுக்குள் கடத்தும் முயற்சி, ஆஸ்திரேலிய எல்லைப்படையின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
 
முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் என இந்தோனேசிய படகை விலைப்பேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். 
 
இதற்காக இரண்டு இந்தோனேசிய படகோட்டிகளை  சீனர்கள் கண்டறிந்ததாக கூறியிருந்தார் Rote தீவின் துணை காவல் ஆணையர் பம்பங் ஹரி விபோவோ. 
 
படகோட்டிகள் மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற Ashmore தீவுப்பகுதி அருகே சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை அதிகாரிகளின் பார்வையில் சிக்கி நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

ஆசிரியர்