ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக ரோஹிங்கியாக்கள் சுட்டுக்கொலை.

வங்கதேச சிறப்பு காவல்படை போதை மருந்து கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 7 ரோஹிங்கியாக்களை  சுட்டுக்கொன்றதாக, அத்துறையின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். மலேசியாவை நோக்கி மீன்பிடி படகுகளில் ரோஹிங்கியா அகதிகளை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்த சூழலில், இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. ரோஹிங்கியா அகதி முகாம்களை குறிவைத்து ஜோகிர் என்றவரின் தலைமையின் கீழ் இயங்கிய கும்பல் ஒன்று ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் வங்கதேச படையுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இதில் குண்டடிப்பட்ட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்படையின் பேச்சாளர் அப்துல்லா சேக் சதி கூறியிருக்கிறார்.

ஆசிரியர்