முழுமையாக மாற்றம் பெற்ற இலங்கை மக்கள். இணையத்தில் பாராட்டுபெறும் இலங்கை.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டம் கூட்டமாக சென்ற அதே கூட்டம்தான் இன்று வரிசையில், கொரோனா தொடர்பான முழுமையான விழிப்புணர்வுடன், தமக்கும் சமூகத்துக்குமான பாதுகாப்புடன் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தயாராக நிற்கிறது.

இங்கே சாமானியர்கள் முட்டாள்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு எந்தவொரு விடயமும் கொஞ்சம் உறைக்கும்படியாக உரக்கச் சொல்லப்படவேண்டியதாக இருக்கிறது. அது இலங்கையை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாததும் கூட! இதை கடந்த வாரத்தில் செய்யவேண்டிய அரசு ஒழுங்குமுறையாக செய்திருப்பின், கடந்த வெள்ளிக்கிழமை போன்றதொரு நிலையை தவிர்த்திருக்க இயலுமென்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால், காலதாமதமின்றி வார இறுதியில் முடிந்தவரை மக்களுக்கு உறைக்கும்படியாக வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு, பாராட்டும் உரிமையும் எமக்கு இருக்கிறது. ஊடரங்கிலும் குரங்கு வேலை காட்டி கைதான 1,500+ போன்றோர் இன்னமும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்காக மாற்றத்தை ஏற்று சமூகத்தை பாதுகாத்துக்கொள்ள தயாராக இருப்பவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆசிரியர்