Wednesday, April 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவின் தற்போதைய நிலவரம்.

கொரோனாவின் தற்போதைய நிலவரம்.

2 minutes read

 

15 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது மரணம் .உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,. உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது.. இங்கிலாந்தில் ஒரேநாளில், 938 பேரும், ஸ்பெயினில் 747 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மரணங்களை எதிர்கொண்ட ஊகான் நகரம், ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த நிலையில், அதிலிருந்து, விடுபட்டு, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இருப்பினும், சீனாவிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக, கொரோனா பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது.. அந்த பெருந்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 88 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 3 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலியில் உயிரிழப்பு 17 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனாவிற்கு 542 பேர் உயிரிழந்துள்ளனர். பன்னாட்டளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக, அதிகளவில், கொரோனா மரணங்களை எதிர்கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின்..
ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 747 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழப்பு 14,792 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,48,220 ஆக அதிகரித்துள்ளது.

வல்லரசு நாடுகளின் முதன்மையானதாக தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, கட்டுக்கடங்காது பரவும் கொரோனா தொற்றுநோயால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை, 14 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரான்ஸ் தேசம் கொரோனாவுக்கு 10,869 பேரை பலி கொடுத்துள்ளது. அந்நாட்டில் 1,12,950 பேர், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில், கொரோனாவுக்கு 60,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,097ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், இங்கிலாந்து நாட்டில், 938 பேர் கொரோனாவுக்கு காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, பெல்ஜியத்தில், இன்று, ஒரே நாளில் 205 பேர் கொரோனாவுக்கு காவு கொடுக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,240ஆக உயர்ந்துள்ளது. 23,403 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு வேகமெடுக்க தொடங்கிய சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், சவுதி அரேபியா, துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்த தொற்றுநோய் முழு அளவில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதை, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More