உலக நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு.

ஊரடங்கை நீக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கூறி தற்போது ஊரடங்கை விலக்கி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசரகால நிபுணர் டாக்டர் மைக் ரியான், ஊரடங்கை நீக்கும் காலத்திலும், வைரசின் தீவிரம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

முழு அடைப்பைத் தளர்த்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறிய அவர், ஊரடங்கை நீக்கியதால் சில ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான பாதிப்புக்கு உள்ளானதாகவும் மைக் கூறினார்.

ஆசிரியர்