3 லட்சத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு.

உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா நோய் பாதிப்பு உச்சம் தொட்டு, தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு 14 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 83 ஆயிரத்தையும் கடந்துள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 200ஐ கடந்துள்ளது.பிரிட்டன், இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதோடு, பலி எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

பிரான்ஸ், பிரேசில்,ஜெர்மனி, துருக்கி, ஈரான் ஆகிய 5 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் நோய் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா நோயிலிருந்து 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ள நிலையில், 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆசிரியர்