சீனாவுக்கு எதிராக எட்டு நாடுகள்!!!

மனித உரிமைகளுக்கும், உலக வர்த்தகத்திற்கும் சீனா எதிரானதாக இருப்பதாக குற்றம் சாட்டி, எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.

நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்ற இந்த அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய எட்டு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் இணைந்து சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு முட்டுக்கட்டை போடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது.

ஆசிரியர்