குடுப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்திய மரணம்.

மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவர் திடீரென வெளியேறி ஏரி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Samwel Uko (20), ரெஜினாவிலுள்ள தனது அத்தையைக் காணவந்த நிலையில், தனது உறவினரான Ginawi Ginawiயிடம் தனது கண்ணுக்கு என்னென்னவோ தெரிகிறது, யாரோ என்னைக் கொல்லப்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

எனவே இருவருமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளர்கள். ஆனால், மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக Ginawiயை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர் செவிலியர்.சற்று நேரத்துக்குப்பின் Ginawiயை மொபைலில் அழைத்த Samwel, தான்மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார். இருவருமாக தங்கள் அறைக்கு சென்றிருக்கிறார்கள்.

அப்போது திடீரென ஜன்னல் வழியாக வெளியே சென்றுள்ளார் Samwel. அவரைக் காணாமல் Ginawi தேடி அலையும்போது, பொலிசார் ஏரியில் ஒருவரது உடல் கிடப்பதைக் கண்டு அதை அவரிடம் காட்ட, அது Samwel என்பது தெரியவந்துள்ளது. அது தற்கொலை என கருதப்படுகிறது.

ஆகவே, Samwelக்கு மருத்துவமனையில் என்ன நடந்தது, அவர் எப்படி மருத்துவ ஊழியர்கள் கண்காணிப்பிலிருந்து வெளியேறினார் என கேள்வி எழுப்பியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.Samwelஉடன் தன்னையும் மருத்துவமனைக்குள் அனுமதித்திருந்தால் என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும் என Ginawi குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருடன் ஒருவர் உடன் இருக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்லன.மருத்துவமனைக்குள் என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்