March 31, 2023 7:34 am

ஜே.வி.பிக்கு அஞ்சி தேர்தலைப் பின்தள்ளும் ரணில்! – அநுர குற்றச்சாட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஜே.வி.பியின் எழுச்சியைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுகின்றார். அதனால்தான் அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்கின்றார்.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த வருடம் மார்ச் மாதம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. தேர்தலை நடத்தாமல் அமைச்சர் எந்தவொரு காரணமும் இன்றி தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திப்போட்டார். நாங்கள் அப்போது அதனோடு மோதவில்லை. நாளை (19) அது முடிகின்றது. இனி அரசமைப்பின்படி – உள்ளூராட்சி சட்டத்தின்படி தேர்தலை நடத்தியாக வேண்டும்.

தேர்தல் வேண்டும் என்பது எங்களது நிகழ்ச்சித் திட்டம் அல்ல. அரசமைப்பின்படி நடத்தியே ஆக வேண்டும். அதுதான் ஜனநாயகம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைப்பதற்கான காரணம் பணம் இல்லாமை இல்லை. ஜே.வி.பியின் எழுச்சியைக் கண்டே அவர் அஞ்சுகின்றார். அதைத் தடுக்க அவர் முயற்சிக்கின்றார்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்