Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்யவுள்ள தொழிலதிபர்

92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்யவுள்ள தொழிலதிபர்

0 minutes read

தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாக உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்த ஆன் லெஸ்லி ஸ்மித் என்ற 66 வயதானவரை அவர் திருமணம் செய்யவுள்ளார்.

மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர்.

முர்டோக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என மர்டாக் தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் பிறந்த முர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்குச் சொந்தக்காரர். முர்டாக்கிற்கு முதல் மூன்று திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.

அவரது நான்காவது மனைவி முன்னாள் மொடல் அழகி ஜெர்ரி ஹால் கடந்த ஆண்டுதான் அவரை விட்டு பிரிந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More