இத்தாலியில் உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி இது குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதில் இத்தாலியை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்தின்போது ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியை பயன்படுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அபராதமாக ஒரு லட்சம் யூரோ வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமானது இத்தாலி பிரதிநிதிகள் சபைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.