செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 ஆண்டுத் தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 ஆண்டுத் தடை

0 minutes read

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டில் அரசாங்கப் பதவி வகிப்பதற்கு 5 ஆண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை, அந்நாட்டுத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

ஊழல் வழக்கில் சில நாட்களுக்கு முன்னர், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் கான் நீக்கப்படவுள்ளார்.

இந்த நிலையில், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை எனத் இம்ரான் கான் கூறிவருகிறார். எனினும், அதனைப் பாகிஸ்தானிய அரசாங்கம் மறுத்துள்ளது.

தீர்ப்பை எதிர்த்துத் கானின் வழக்கறிஞர் குழு இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.

70 வயதுடைய இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அவருக்கும் அந்நாட்டின் ராணுவத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாயிலாகப் பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.