“இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தக்கூடிய அதிகாரப் பகிர்வு விடயத்தில் தற்போது கையடிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.”
– இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அதிகாரப் பகிர்வில் கை வைப்பதற்கான நேரல் அல்ல இது. வடக்கு மக்களுக்குப் பாரிய சில பிரச்சினைகள் உள்ளன. விவசாய நிலப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை என்பன உள்ளன. அவை தொடர்பில் தற்போது நடவடிக்கை எடுக்கலாம். மாறாக இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் கையடிக்ககூடாது. நாட்டில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையே உள்ளது.” – என்றார்.