ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை அழைப்பதற்கு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வை குருநாகலையில் நடத்துவதற்கு அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அரசு பக்கம் உள்ள சுதந்திரக் கட்சி குழு கொழும்பில் நிகழ்வை நடத்துவதற்குத் தயாராகி வருகின்றது. கட்சியின் ஐக்கியம் கருதி இதற்கு மைத்திரிபால சிறசேன அனுமதி வழங்கியுள்ளார்.
எனவே, கொழும்பில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு அக்கட்சியின் ஆலோசகரான சந்திரிகா அம்மையாரை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.