October 2, 2023 8:32 am

“லசந்த படுகொலைக்கு ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை?”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் குழுக்களை அம்பலப்படுத்துவீர்களா? இல்லையா?”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“லசந்த விக்கிரமதுங்கவைக் கொன்ற கொலையாளிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் அந்த நபர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கேள்வி எழுப்ப நாம் ஒருபோதும் பயப்படவில்லை. இந்த விடயத்தில் உரிய நீதி கிட்ட வேண்டும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்