2
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடும் வாக்குவாதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் தனது இராணுவத் தலைமையகத்தைக் கூடப் பாதுகாக்க முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை தொடர்ந்தே இந்த வாக்குவதம் இடம்பெற்றது.
இதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகள் இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன என்று தெரிவித்தார்.
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines