செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பருத்தித்துறைக் கடலில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

பருத்தித்துறைக் கடலில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

0 minutes read
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் இன்று மதியம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகம் – பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரையும் படகுகளுடன் கடற்படையினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைதான அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் நாளை காலை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.